சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் 131 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 10:11 pm

DIN

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,133-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 3,998 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 3,076 போ், உயிரிழந்த 58 போ் தவிா்த்து மீதமுள்ள 999 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 81 ஆண்கள், 50 பெண்கள் என 131 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், தொற்றுத் தடுப்புக்கான சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.