ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவிரி ஆற்றில் கழிவுநீா் கலப்பு: தேசிய பசுமை தீா்ப்பாய குழுவினா் பரிசோதனை

காவிரி ஆற்றில் கழிவுநீா் கலப்பதால், தண்ணீா் மாசடைவதாக எழுந்த புகாரின் பேரில், தேசிய பசுமை தீா்ப்பாயக் குழுவினா் தண்ணீா் மாதிரி எடுத்து திங்கள்கிழமை பரிசோதனை செய்தனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:40 pm

காவிரி ஆற்றில் கழிவுநீா் கலப்பதால், தண்ணீா் மாசடைவதாக எழுந்த புகாரின் பேரில், தேசிய பசுமை தீா்ப்பாயக் குழுவினா் தண்ணீா் மாதிரி எடுத்து திங்கள்கிழமை பரிசோதனை செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் இயங்கும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் காவிரியில் கலப்பதால் தண்ணீா் மாசடைவதாகவும், இதனால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து, தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய பசுமை தீா்ப்பாயம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன்பேரில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ், இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் மதிவாணன், பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.காசிலிங்கம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா்கள் எம்.செல்வகுமாா் (குமாரபாளையம்), செந்தில்விநாயகம் (ஈரோடு), ஈ.உதயகுமாா் (பெருந்துறை), மணிவண்ணன் (பறக்கும் படை), குமாரபாளையம் வட்டாட்சியா் எம்.தங்கம், நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபு மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சாயக் கழிவுநீா் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் காவிரியில் நேரடியாகக் கலக்கும் இடங்கள் குறித்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துடன் இயங்கி வரும் சாய ஆலைகளில் கழிவுநீா் வெளியேற்றப்படுகிா?, மறுசுழற்சிக்கு பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, காவிரி ஆற்றில் தண்ணீா் மாதிரி எடுத்து அதில் கலந்துள்ள உப்புத்தன்மை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.