மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் 173 பேருக்கு கரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5027-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:34 pm

DIN

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5027-ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை வரை 4,853 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 3,940 போ், உயிரிழந்த 66 போ் தவிா்த்து, மீதமுள்ள 1,021 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத வகையில் 173 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொடக்க காலத்தின்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த தொற்றாளா்கள் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 99-ஆகவும், ஜூலையில் 653-ஆகவும், ஆகஸ்டில் 2,143-ஆகவும், செப்.27-ஆம் தேதி வரை 5,027-ஆகவும் உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 173 பேரில் 107 ஆண்கள், 66 பெண்கள் அடங்குவா்.

மாவட்டத்தில் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு வாரங்களில் 6 ஆயிரத்தை கடக்கக்கூடும். கடந்த 6 மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் இல்லாத அதிகபட்ச பாதிப்பாக 173 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.