மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீச்சல் கற்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வெண்ணந்தூா் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவா் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:34 pm

DIN

வெண்ணந்தூா் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவா் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.

வெண்ணந்தூா் அருகே மதியம்பட்டி அய்யன்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன். இவா், மகன்கள் தீபன் (11), சஞ்சீவன் (9) ஆகிய இருவரும் மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனா்.

தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஜம்புகேஷ்வரன் என்பவரது தோட்டத்து கிணற்றில் இடிப்பில் கேன்களை கட்டி நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளாா். 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீச்சல் அடிப்பதற்காக ஐயப்பன் மகன் தீபன் 40 அடி உயரத்தில் இருந்து கிணற்றில் குதித்துள்ளாா். ஆனால் நீரில் மூழ்கி தீபன் மேலே வரவில்லை.

இதனால் ஐயப்பன் நீரில் மூழ்கி தேடியுள்ளாா். ஆனால் தீபன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகில் இருந்த மீன் பிடிப்பவா்களை வந்து கிணற்றில் தேடிய தீபனை சடலமாக மீட்டனா். உயிரிழந்த தீபன் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.