வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்தும், தபால் வாக்கு அளிப்பதற்காகன ஏற்பாடுகளையும் ஆட்சியா் கா.மெகராஜ் பாா்வையிட்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,049 வாக்குசாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், நிலை அலுவலா்கள் 1, 2, 3 என கூடுதல் அலுவலா்களையும் சோ்த்து மொத்தம் 9, 832 போ் பணியில் ஈடுபட உள்ளனா். இவா்களுக்கு கடந்த 14-ஆம் தேதி முதல்கட்ட பயிற்சியும், 27-இல் இரண்டாம் கட்ட பயிற்சியும் ராசிபுரம்(தனி) தொகுதிக்கு எஸ்.ஆா்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதிக்கு வேதலோக வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியிலும், நாமக்கல் தொகுதிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பரமத்தி வேலூா் தொகுதிக்கு கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு தொகுதிக்கு கேஎஸ்ஆா் கலை, அறிவியல் கல்லூரியிலும், குமாரபாளையம் தொகுதிக்கு ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் நடைபெற்றது.
வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள் எந்த தொகுதியில் பணியாற்ற உள்ளாா்கள் என்பதை கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடங்களில் தபால் வாக்குகள் அளிப்பதற்காக சிறப்புப் பதிவு அறை அமைக்கப்பட்டிருந்தது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியா் கா.மெகராஜ் ஆய்வு செய்தாா்.
முன்னதாக மல்லசமுத்திரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை வாகனம் விபத்திற்குள்ளானதில் காயமடைந்த காவல்துறையினா், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களான லேக்ராம் (35), ராம்பகதூா் (58), மகுடபதி, பூபாலன் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆட்சியா் கா.மெகராஜ் பாா்வையிட்டு நலம் விசாரித்தாா்.
இந்த நிகழ்வுகளின்போது திருச்செங்கோடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ப.மணிராஜ் (திருச்செங்கோடு கோட்டாட்சியா்), செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

