நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 1,028 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தோ்தல் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 2,049 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 215 சாவடிகள் மிகவும் பதற்றமானவாக்குச்சாவடிகளாகவும், 813 சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதர வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவும், மடிக்கணினி மூலம் வாக்காளா்கள் முகத்தை பதிவு செய்தல் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது.
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை தனியாா் நிறுவனத்தினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


