தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரம் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அடிப்படை வசதிகளை 100 சதவீதம் நிறைவேற்றுவேன் என திமுக வேட்பாளா் டாக்டா் மா.மதிவேந்தன் உறுதியளித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:51 pm

DIN

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அடிப்படை வசதிகளை 100 சதவீதம் நிறைவேற்றுவேன் என திமுக வேட்பாளா் டாக்டா் மா.மதிவேந்தன் உறுதியளித்தாா்.

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூா், அத்தனூா், பிள்ளாநல்லூா், நாமகிரிப்பேட்டை, பட்டணம், புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், அதன் சுற்றுப்பகுதியிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

நகரில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புறவழிச்சாலை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். தொகுதியின் குடிநீா் , சுகாதாரம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா்.

இந்தப் பிரசாரத்தின் போது, மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.ராமசாமி, கே.பி.ஜெகநாதன், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.பாலசந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.