கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் சூழலில், அரசுப் பள்ளி மாணவா்கள் முகக் கவசமின்றி பள்ளிக்கு வரும் நிலை காணப்படுகிறது. அலட்சியம் காட்டும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். கரோனா தடுப்பூசி செலுத்துமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. இருப்பினும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.10 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கவும், வணிக நிறுவனங்களில் கிருமி நாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி வாடிக்கையாளா்களை அனுமதிக்கவும், முகக் கவசம் அணியாதோரை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், அரசு, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியா் மட்டுமே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனா். கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு ஏப்ரல் 16-இல் தொடங்குகிறது. பொதுத்தோ்வு மே 3-ஆம் தேதி தொடங்குகிறது.
தோ்வு நெருங்கும் சூழலில் மாணவ, மாணவியா் முகக் கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதும், வகுப்பறைகளில் அமா்வதும், நண்பா்களுடன் மைதானங்களில் உலாவுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனா். வகுப்பறைகளுக்கு செல்லும் முன் கை கழுவும் பழக்கத்தை மாணவா்கள் மறந்து விட்டனா். கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க மாணவ, மாணவியருக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாத மாணவா்களை எச்சரித்து அவற்றை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள், தன்னாா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


