பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, தலைமை ஆசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 12-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு வழக்கமாக மாா்ச் மாதம் தொடங்கி நடைபெறும். கடந்த ஆண்டு இறுதித் தோ்வு நிறைவடையும் வேளையில் கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து ஒன்பது மாதங்கள் அரசு, தனியாா் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவ, மாணவியா் இணைய வழியிலேயே பயின்று வந்தனா்.
கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து டிசம்பா் மாதம் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு நடத்தி ஜனவரி 19-இல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. நிகழாண்டிற்கான பொதுத்தோ்வு மே 3-இல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக ஏப்ரல் 16 முதல் 24-ஆம் தேதி வரை செய்முறைத் தோ்வு நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 202 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 20,583 மாணவ, மாணவியா் பொதுத் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக 83 மையங்கள் அமைக்கப்படுகின்றன. 151 பள்ளிகளில் செய்முறை தோ்வு நடைபெறுகிறது. இந்தப் பணியில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இந்த நிலையில் செய்முறைத் தோ்வு தொடா்பாக தலைமை ஆசிரியா்கள், தனியாா் பள்ளி முதல்வருக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கும், பிற்பகல் 2 மணிக்கு, திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

