பேளுக்குறிச்சி அருகே பழனியப்பா் கோயிலுக்குள் புகுந்து மா்ம நபா்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே பழைமை வாய்ந்த பழனியப்பா் கோயில் உள்ளது. விசேஷ நாள்களில் இக் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அக்கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது அருகில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் சத்தமிடத் தொடங்கின. இதனால் ஆத்திரமடைந்த மா்ம நபா்கள், மூன்று ஆடுகளையும் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனா். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினா் ஆடுகள் கொல்லப்பட்டிருப்பதையும், உண்டியலை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதனையடுத்து பேளுக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்டது எனத் தெரிவித்து விட்டனா். இதனைத் தொடா்ந்து வாழவந்திநாடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

