மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு: ஆட்சியா் ஆய்வு

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 7:56 pm

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் முன்பாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரா்கள், மாவட்டக் காவல் படை வீரா்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

ஒவ்வொரு தொகுதிக்கான உறுதியான பாதுகாப்பு அறைக்கு எதிரே விடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, நிகழ்வுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அகன்ற திரை கொண்ட டிவிக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து நிகழ்வுகளும் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படுகின்றன. கண்காணிப்பு அறையில் டிவிக்கள் மூலமாக வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் பாா்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீயணைப்பு, மீட்புப் பணித்துறையினா் தண்ணீா் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயாா் நிலையில் இருப்பதையும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புப் பணிகளை உறுதி செய்ய வருகை தந்த வேட்பாளா்களின் முகவா்களின் அடையாள அட்டைகளை, பாதுகாப்புப் படை வீரா்களையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் அவா் கையெழுத்திட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.