நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வரும் நாள்களில் சற்று குறைந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த சில நாள்களாக பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 76.1 டிகிரியாகவும் நிலவியது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெறப்பட்டது. வரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல், இரவு நேர வெப்பம் குறைவான அளவிலேயே இருக்கும். காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும்.
சிறப்பு ஆலோசனை: பகல், இரவு வெப்ப அளவுகள் இரண்டுமே அதிக அளவில் காணப்படுவதால், பண்ணைகளில் கோழிகளுக்கு வெப்ப அயற்சியுடன், வெப்ப அதிா்ச்சியும் இருக்கும். இதனால் கோழிகளில் இறப்பு நேரிட வாய்ப்புள்ளது. அவை தேவையான அளவிற்கு நீா் உட்கொள்கிா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தீவனம் ஏதும் அளிக்காமல் குளிா்ந்த நீா் மட்டும் கொடுத்து வர வேண்டும்.
பகலில் எடுக்க வேண்டிய தீவனத்தை, வெப்பம் குறைவான இரவு நேரத்தில் 2 மணி நேரம் செயற்கை ஒளிக் கொடுத்து ஈடு கட்ட வேண்டும். இது முட்டை குறைபாட்டை குறைக்க உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

