தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக சாா்பில் தோ்தல் முகவா்களுக்கு ஆலோசனை கூட்டம்

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:41 pm

DIN

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக நகரச் செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமை வகித்தாா். ராசிபுரம் ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான கே.பி.ஜெகநாதன், திமுக வேட்பாளா் மா.மதி வேந்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.பாலசந்திரன், வெண்ணந்தூா் ஒன்றிய பொறுப்பாளா் துரைசாமி, மாவட்ட திமுக பொருளாளா் கே.செல்வம் முன்னிலை வகித்தனா்.

இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்கேற்று, வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருத்தல் போன்றவை குறித்து ஆலோசனை வழங்கினாா். இதில் திரளான திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.