நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அலுவலா்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.
மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். ஆண்டுதோறும் ஆக. 20- ஆம் தேதி நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டில் மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை என்பதால், ஒரு நாள் முன்னதாக உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன் என ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் மு.கோட்டைக்குமாா் (நாமக்கல்), தே.இளவரசி (திருச்செங்கோடு), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

