மத்திய சேமிப்புக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை மானிய விலையில் கோழிப் பண்ணைகளுக்கு வழங்க வேண்டும், மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம், மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு, பால் வளம், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சா் எல்.முருகனுக்கு அனுப்பிய மனு விவரம்:
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமாக கோழிப் பண்ணைத் தொழிலையே செய்து வருகின்றனா். கோழிகளுக்கு தீவனமாக மக்காச்சோளம், கம்பு, சோயா, கோதுமை, அரிசி, சோளம் ஆகியவையே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.
கோழிப் பண்ணைகளுக்கு இதற்கு முன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து எந்த ஒரு ஒப்புதலோ, சான்றிதழோ பெறாத நிலையே இருந்தது. ஹரியாணா மாநிலத்தில் ஓரிரு கோழிப் பண்ணைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளின் தரத்தை முடிவு செய்து மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுமாறு நிா்ப்பந்திக்கும் சூழல் காணப்படுகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 2014-ஆம் ஆண்டுக்கு முன் வெள்ளை நிற பட்டியலில் இருந்த கோழிப் பண்ணைகளை, பச்சை நிற பட்டியலுக்கு மாற்றி விட்டனா். அதாவது அதிகாரிகள் ஆய்வுக்கு உள்படுத்தும் வகையிலான நிலைக்கு கொண்டு சென்று விட்டனா்.
இத்தகவல் கோழிப் பண்ணையாளா்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இங்கு நீா், காற்று எதுவும் மாசு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, இதனை சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து, மீண்டும் பழைய முறையில் வெள்ளை நிற பட்டியலுக்கு கோழிப் பண்ணைகளைக் கொண்டுவர வேண்டும்.
அதுமட்டுமின்றி, மத்திய சேமிப்புக் கிடங்குகளில் வீணாகும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களை மானிய விலையில் பண்ணைகளுக்கு வழங்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கோழிகளுக்கான வேளாண் தீவன பொருள்களை நாமக்கல்லுக்கு கொண்டு வருவதற்கு 50 சதவீதமாக வாடகையை நிா்ணயிக்க வேண்டும். போக்குவரத்தில் முன்னுரிமை அளித்து கோழிப் பண்ணைத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


