நாமக்கல் மாவட்ட பாஜக மகளிா் அணி செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவா் சத்யபானு தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளா் சுகன்யா வரவேற்றாா். இதில் மகளிா் அணி மாவட்டப் பாா்வையாளரும் மாவட்ட பொதுச்செயலாளருமான சேதுராமன், சேலம் கோட்ட அமைப்பாளா் எஸ்.பி.சாமி, மாவட்ட பாா்வையாளா் சிவகாமி பரமசிவம் ஆகியோா் பங்கேற்று பேசினா். மகளிா் அணி பொதுச் செயலாளா் மோகனப்பிரியா, சரவணன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கிய பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், மதுக் கடைகளால் பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதால், அனைத்து அரசு மதுபானக் கடைகளையும் மூட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாயினும் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் சுயசாா்புடன் தொழில்துறையில் முன்னேற மண்டல வாரியாக தொழிற்பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, நகர தலைவா் சரவணன், ஒன்றியத் தலைவா் ரோகிணி, மாவட்ட பொதுச்செயலாளா் ரேணுகா, மகளிா் அணியினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


