நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சிறப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் வரவேற்றாா். நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், நிா்வாகப் பொறியாளா் சுகுமாா், தொண்டு நிறுவன அலுவலா் மனோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளா் சரவணகுமாா் பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதரே அள்ளும் நிலைமை மாற வேண்டும். அத்தொழிலுக்கு அரசு தடை விதித்தபோதும், அதில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளா்கள், இதர பணியாளா்களின் குழந்தைகளும், அந்தத் தொழிலைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அவா்களின் நலனுக்காக தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை அவா்கள் தாட்கோ உதவியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


