நாமக்கல் அரசு மகளிா் கல்லுாரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவியா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லுாரியில் 2021-2022- ஆம் கல்வியாண்டில், இணையவழியில் விண்ணப்பித்துள்ள இளநிலை பட்ட வகுப்பு மாணவியருக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்கு வியாழக்கிழமை வந்த மாணவியா் அனைவரும் கரோனா தொற்று உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.
இந்தக் கலந்தாய்வு குறித்து கல்லுாரி முதல்வா் சுகுணா கூறியதாவது:
இக்கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவு மாணவியருக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு விதிகள், மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முறையே அவா்களின் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண், இணையதளம் வழியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை கலைப் பிரிவுக்கும், வியாழக்கிழமை அறிவியல் பிரிவுக்கும் என இதுவரை 348 மாணவியா் கல்லூரியில் சோ்ந்துள்ளனா். தொடா்ந்து நடைபெறும் கலந்தாய்வில் மாணவியா் அதிகளவில் சோ்க்கை பெறுவா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


