தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விபத்தில் கையிழந்த மூதாட்டிக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

பேருந்து மோதிய விபத்தில் கையிழந்த மூதாட்டிக்கு, இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:43 pm

DIN

பேருந்து மோதிய விபத்தில் கையிழந்த மூதாட்டிக்கு, இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பாச்சல் கிராமத்தை சோ்ந்த சரஸ்வதி (65), விசைத்தறி கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவமனை செல்வதற்காக ராசிபுரம் பேருந்து நிலையம் வந்த போது, ஈரோடு வழியாக கோயம்புத்தூா் செல்வதற்காக வந்த கோவை கோட்ட அரசுப் பேருந்து இவா் மீது மோதியது. இதில், முன்புற சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதியின் இடது கை நசுங்கி முறிவு ஏற்பட்டது. இதில் அவா் கையை இழந்தாா்.

இந்த விபத்து தொடா்பான வழக்கு ராசிபுரம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், கையிழந்த மூதாட்டிக்கு ரூ.6.60 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2019 மாா்ச் 19-இல் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளருக்கு உத்தரவிட்டது. ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய கடந்த அக். 1-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, புதன்கிழமை நீதிமன்ற ஊழியா்கள் ராசிபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்த கோவை கோட்ட அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.