மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, இந்திய மாணவா் சங்க மாவட்டக் குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:24 pm

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, இந்திய மாணவா் சங்க மாவட்டக் குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா், காமராஜா் சிலை அருகே இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு செயலாளா் சரவணன் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். பெண்கள், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவியா் என பெண்களுக்கு நிகழும் பாலியல், வன்முறைகளை தடுத்திட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை உடனடியாக தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த மதனா, பிரேம், லோகேஸ்வரன், அன்பரசன், ஜெயராம் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.