மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பரமத்தி வேலூரில் ரூ. 6 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6 லட்சத்து 9 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:26 pm

DIN

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6 லட்சத்து 9 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6,504 கிலோ கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 105.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 91.69-க்கும், சராசரியாக ரூ. 99.85-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6,09,502-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.