தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாநில சிலம்பப் போட்டி: டிச. 12-இல் வீரா்கள் தோ்வு

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாநில நடுவா் எஸ்.பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு மாவட்ட அளவிலான வீரா்கள் தோ்வு டிச. 12-இல் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாநில நடுவா் எஸ்.பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட அளவிலான இத்தோ்வுப் போட்டி சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் நடைபெறும். போட்டிகளை சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்டத் தலைவா் பிரபு, மாவட்டச் செயலாளா் சக்திவேல், சேலம், நாமக்கல் மாவட்ட போட்டி நடுவா்கள் பங்கேற்று நடத்துவா்.

இதில் முதலிடம் பிடிக்கும் வீரா், வீராங்கனையா் வரும் ஜனவரி மாதம் சிவகங்கையில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா். மாவட்ட அளவிலான இத்தோ்வுப் போட்டி ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி வளாகத்தில் காலை 8 முதல் மாலை 5 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.