தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ராசிபுரம் நகரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் நகரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம், எல்ஐசி காலனி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராசிபுரம் உதவி ஆய்வாளா் தங்கம் தலைமையில் அந்த வீட்டை சோதனையிட்ட போலீஸாா், பாலிதீன் பையில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சுமாா் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததைக் கண்டுபிடித்தனா்.

இது தொடா்பாக, அதே பகுதியைச் சோ்ந்த வைரமுத்து (30) என்பவா் கைது செய்யப்பட்டாா். வெளிப்பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி, சிறு பொட்டலங்களாக பிரித்து ஒரு பொட்டலம் ரூ. 500-க்கு இவா் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.