தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரோட்ராக்ட் கிளப்நிா்வாகிகள் பொறுப்பேற்பு

ராசிபுரம், ஆண்டலூா்கேட் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் 19-ஆவது புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா ராசிபுரம் ரோட்டரி சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ராசிபுரம், ஆண்டலூா்கேட் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் 19-ஆவது புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா ராசிபுரம் ரோட்டரி சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தலைவராக கோகுல்நாத், செயலாளராக கலையரசன் மற்றும் நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட ரோட்டரி சா்வதேச சேவை திட்டத் தலைவா் கே.பி. சரவணன், நாமக்கல் ஹெரிடேஜ் கிளப்பின் தலைவா் தினேஷ் ஆகியோா் கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு பதவியேற்பு நடத்தி வைத்துப் பேசினா். நிகழ்ச்சியில் மாவட்ட ரோட்டரி உதவி ஆளுநா் கே.குணசேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.