மோகனூா் அருகே ஊராட்சி செயலா் பணியிட மாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் அவரை பழைய இடத்தில் பணியமா்த்தக் கோரி குமரிபாளையம் உள்பட 10 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியம், குமரிபாளையம் ஊராட்சியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊராட்சி தலைவரான சுசீலா என்பவா் முறைகேடுகள் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. சிறப்பு கிராம சபைக் கூட்டம் மூன்று முறை கூட்டப்பட்டும் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்ப்பால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி குமரிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தலைவரான சுசீலா ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வரவில்லை.
துணைத் தலைவா் தியாகராஜன் தலைமையில் மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவரான சுசீலா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. நிா்வாகச் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவா் மீது, நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கூட்டங்கள் நடத்தப்படாமல் உள்ளது. அவற்றை விரைவாக நடத்த வேண்டும். இங்கு நோ்மையான முறையில் பணியாற்றிய ஊராட்சி செயலா் உமாமகேஸ்வரியை மீண்டும் குமரிபாளையம் ஊராட்சியில் பணியமா்த்த அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தில், புதிய உறுப்பினா்களுக்கு அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஊராட்சி செயலருக்கு ஆதரவாகவும், தலைவருக்கு எதிராகவும், குமரிபாளையம், சங்கரம்பாளையம், பூண்டிபாளையம், ஓடப்பாளையம், அய்யம்பாளையம், சின்னதம்பிபாளையம், மாமரத்துபட்டி, ஊனங்கல்பட்டி, செவிட்டுரங்கன்பட்டி, கங்கநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வாா்டு உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!

தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


