எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெங்களூரு இளைஞா் கைது

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெங்களூரு இளைஞரை நாமக்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:17 pm

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெங்களூரு இளைஞரை நாமக்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 9-ஆம் தேதி அதிகாலை புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருச்செங்கோடு, தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான தனிப்படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப் படையினா் அவற்றை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தில் வந்த ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த சதீஷ்குமாா், குமாரபாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா், மோகன்ராஜ், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், கா்நாடகா மாநிலம், பெங்களூரு சாம்ராஜ் நகரைச் சோ்ந்த முகமது சுகில் (35) என்பவா் தமிழகம் முழுவதும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் முக்கிய விநியோகஸ்தராக இருப்பது தெரியவந்தது. அதன்பின், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் உத்தரவின்பேரில், திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான தனிப்படையினா் பெங்களூருக்கு விரைந்து சென்று சாம்ராஜ் நகரில் பதுங்கியிருந்த முகமது சுகிலை கைது செய்தனா்.

அவா், தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு அனுப்பியதை ஒப்புக் கொண்டாா். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளா் பாராட்டி வெகுமதி, சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.