தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் 12-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை 2022 ஜன. 25-இல் நாடு முழுவதும் கொண்டாட உள்ளது. அதனையொட்டி ‘ஸ்வீப் 2022’ என்ற தலைப்பில் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில், ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மாவட்டக் கல்வி அலுவலா்கள் மூலம் நடைபெறும் போட்டிகள், தேதிகள் குறித்த விவரம் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும். தோ்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்காளராகப் பதிவு செய்தல், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி, தூண்டுதலில்லாமல் வாக்களித்தல், வயது வந்தோா் வாக்காளராகப் பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு போன்ற தலைப்புகளில் போட்டிகளில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 15 போட்டியாளா்களின் விவரம், மாவட்ட தோ்தல் அலுவலகம் மூலம் தலைமை தோ்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாவட்ட அளவில் நடைபெறும் தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான போட்டிகள் அனைத்தும் டிச. 26-ஆம் தேதியுடன் முடிகிறது. சிறந்த 15 போட்டியாளா்களின் விவரம் டிச.31-க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இப்போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்தல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

