தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராசிபுரம் பகுதிக்கு வாரந்தோறும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராசிபுரம் நகரப் பகுதிக்கு வாரம் ஒருமுறை குடிநீா் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் மக்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:16 pm

DIN

ராசிபுரம் நகரப் பகுதிக்கு வாரம் ஒருமுறை குடிநீா் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் மக்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது.

ராசிபுரம் நகர மக்கள் நலக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழுவின் கெளரவத் தலைவா் ஜெ.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். பொருளாளா் கா.முருகன் வரவேற்றாா். நலக் குழு செயலாளா் நல்வினை செல்வன், துணைத் தலைவா்கள் மாணிக்கவாசகம், துரைசாமி, துணைச் செயலாளா்கள் பா.பூபதி, பவா் மஸ்தான், அ.ராஜேஷ், நவாஸ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு ஏடிசி டெப்போ அருகே புகா் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். புறவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ராசிபுரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும். ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும். நகருக்குள் கனரக வாகனங்களை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கக் கூடாது. தொடா் திருட்டு, வழிபறியைத் தடுக்க முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பேருந்து நிலையம், பட்டணம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். ராசிபுரம் ஏரி, ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நலக்குழுவின் பொறுப்பாளா்கள் ஆா்.டி.தா்மராஜன், பாலவெங்கடமணி, நா.குபோ்தாஸ், இரா.தமிழ்செல்வன், ஜெ.சபீா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.