தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு கல்லூரி மாணவா்களுக்கான சுதந்திர தின போட்டிகள்

ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சாா்பில் 75 -ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடா் நிகழ்வாக மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டி

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சாா்பில் 75 -ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடா் நிகழ்வாக மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டியும் கட்டுரைப் போட்டியும் புதன்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரா்கள், 21-ஆம் நூற்றாண்டில் காந்தியத்தின் தேவை ஆகிய தலைப்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டியில் மாணவா்கள் பங்கேற்றனா். முக்கிய நிகழ்வாக 75 மாணவா்கள் ஒன்றுகூடி தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பாடினா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் சி மணிமேகலை தலைமை வகித்தாா். வரலாற்றுப் பேராசிரியா் பிரகாஷ், அரசியல் அறிவியல் துறை பேராசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் நடுவா்களாக பணியாற்றினா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் முனைவா் ஜெயக்குமாா், இந்திராணி, கிருபா தேவி, பிரபாகரன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.