ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசு பேருந்து மோதி திமுக பிரமுகா் பலி

நாமக்கல்லில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:45 pm

நாமக்கல்லில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பரமத்திவேலூா் வட்டம், தெற்கு நல்லியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராக்கியண்ணன் மகன் பூபதி (45). இவா் பரமத்திவேலூா் பேரூராட்சி 16-ஆவது வாா்டு செயலாளராக உள்ளாா். நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். திங்கள்கிழமை காலை முதலைப்பட்டியில் இருந்து நாமக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து பூபதியின் மீது மோதியது.

இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த நாமக்கல் நகர போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து உதவி ஆய்வாளா் தங்கம் விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.