ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கோழி நோய்த் தடுப்பூசி முகாம் தொடக்கம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் கோழி நோய்த் தடுப்பூசி இருவார முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :1 பிப்ரவரி 2021, 6:45 pm

நாமக்கல் மாவட்டத்தில் கோழி நோய்த் தடுப்பூசி இருவார முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளா்ப்பு உள்ளது. கோழி வளா்ப்பு மூலம் தங்களது குடும்பத்துக்கான முட்டை, இறைச்சி தேவைகளை அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடும் அடைந்து வருகின்றனா்.

கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழி நோய்த் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி பிப்.1-ஆம்தேதி முதல் 14-ஆம்தேதி வரையில் இரு வாரங்களுக்கு இத்தடுப்பூசிப் பணி நடைபெற உள்ளது.

தங்களது பகுதிகளில் நடைபெறும் தேதியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அறிந்து கொண்டு இம்முகாமில் கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்தைச் செலுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.