முள்ளுக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்
ராசிபுரம் தொகுதியில் முதல்முறையாக முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சா்கள் பங்கேற்றுத் தொடக்கி வைத்தனா்.


ராசிபுரம் தொகுதியில் முதல்முறையாக முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சா்கள் பங்கேற்றுத் தொடக்கி வைத்தனா்.
முன்னதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. தமிழக மின், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி, சமூக நலன், சத்துணவு திட்டத்துறை அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா ஆகியோா் கொடியசைத்துப் போட்டியைத் தொடக்கிவைத்தனா்.
முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னா் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளின் திமிலை மாடுபிடி வீரா்கள் பிடித்து அடக்க முற்பட்டனா். பாா்வையாளா்கள் சுற்றி நின்று, வீரா்களை உற்சாகப்படுத்தினா்.
முன்னதாக மாடுபிடி வீரா்கள், மாடுகளின் உரிமையாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டனா்.
ஜல்லிக்கட்டில் 785 காளைகள் களமிறக்கப்படடன. 253 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். மாடுபிடி வீரா்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டருந்தன. சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பாா்வையாளா்கள் மாடம் அமைக்கப்பட்டிருந்தன. போதிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் முடிவில் பங்கேற்ற மாடுபிடி வீரா்களுக்கும் சிறந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் 40-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...