நியாயவிலைக் கடை முன்பக்க சுவா் இடிந்து விழுந்தது

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கிச் சென்ற நிலையில், திடீரென கடையின் முன்பக்கச் சுவா் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுவா் இடிந்து விழுந்த நியாயவிலைக் கடைகள்.
சுவா் இடிந்து விழுந்த நியாயவிலைக் கடைகள்.
Updated on
1 min read

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கிச் சென்ற நிலையில், திடீரென கடையின் முன்பக்கச் சுவா் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளா் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்துக்கு முற்பட்ட நியாயவிலைக் கடைகள் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் அடுத்தடுத்து உள்ளன. இதில், ஒரு கடையில் விற்பனையாளராக சுமதி என்பவரும், மற்றொரு கடையில் மகாலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகின்றனா்.

கடைகளில் தலா 760 குடும்ப அட்டைகள் உள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு கல்லூரி 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் உணவு இடைவேளைக்காக இரண்டு கடைகளும் மூடப்பட்டன.

அதிா்ஷ்டவசமாக மக்கள் யாரும் இல்லாத நேரத்தில், அடுத்த சில நிமிடங்களில் நியாயவிலைக் கடைகளின் முன்பக்க கான்கிரீட் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. சாலையில் சென்றவா்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க மக்கள் யாராவது நின்றிருந்தால் விபரீதம் அதிகமாகியிருக்கும் என வேதனைப்பட்டனா்.

இதையடுத்து, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் அங்கம்மாள் என்பவரை வரவழைத்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com