புகையில்லா போகியைக் கொண்டாட ஆட்சியா் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நமது முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையைக் கொண்டாடினா்.

ஆனால், தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருள்களான நெகிழி மற்றும் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

இதனால், வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது. எனவே, போகிப்பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com