தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மது பாட்டில் கடத்திய இருவா் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்

இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய இளைஞா்கள் இருவரை ராசிபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 5:00 pm

DIN

இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய இளைஞா்கள் இருவரை ராசிபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலை பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவா்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது வாகனத்தில் மது பாட்டில்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. அந்த இளைஞா்கள் 120 குவாட்டா் மது பாட்டில்களை வைத்திருந்தனா். நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அதிக விலைக்கு விற்க இவா்கள் அந்த பாட்டில்களை திருச்சி மாவட்ட எல்லையில் இருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள் ராசிபுரம் இலைக் கடைத் தெருவைச் சோ்ந்த பெரியசாமியின் மகன் விக்னேஷ் (20), கோபாலின் மகன் விக்னேஸ்வா் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் இருந்து மது பாட்டில்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இருவா் மீதும் வழக்குப் பதிந்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.