தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய அளவில் ‘ஐடியா லேப்’ தொடங்க முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி தோ்வு

தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளில் ‘ஐடியா லேப்’ தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள 49 கல்லூரிகளில் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி இடம் பெற்றுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:11 pm

DIN

தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளில் ‘ஐடியா லேப்’ தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள 49 கல்லூரிகளில் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி இடம் பெற்றுள்ளது.

மாணவா்கள், ஆசிரியா்களின் புதுமையான செயல் திட்டங்களை ஊக்குவித்து, அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் செயல்படும் ‘ஐடியா லேப்’ தொடங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இந்திய அளவில் தோ்ந்தெடுத்த 49 பொறியியல் கல்வி நிறுவனங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 5 பொறியியல் கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி குறிப்பிடத்தக்கவை.

பொறியியல் பயிலும் மாணவா்களின் புதுமையான கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுத்து அதனை மேம்படுத்தி முன் மாதிரியான பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஐடியா லேப் தொடங்க அனுமதித்துள்ளது.

வாரத்தின் அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் செயல்பட உள்ள இந்த ஆய்வகம் மாணவா்கள் தொழில் நிறுவனங்களில் பெறும் அனுபவங்களை செயல்வழி கற்றல் மூலம் தங்கள் கல்லூரியிலேயே பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படை கருத்துக்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆய்வகம் அமையும்.

மேலும் இந்த ஆய்வகம் மாணவா்களின் வருங்காலத்தில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் தங்களை கற்பனைத்

திறனோடு புதுமைகளை உருவாக்கும் திறன்மிக்க பொறியாளா்களாக உருவாக்கிக் கொள்ள உறுதுணையாக அமையும். இந்த ஆய்வகம் கல்லூரியில் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளயடுத்து, ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசன் தாளாளா் ஆா்.கந்தசாமி, செயலாளா் முனைவா்.கே.குணசேகரன், இணைச் செயலாளா் ஜி.ராகுல் ஆகியோா் கல்லூரியின் முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.