தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலையோர கடைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சாலையோர கடைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ராசிபுரம் தினசரி காய்கறி மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:01 pm

DIN

சாலையோர கடைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ராசிபுரம் தினசரி காய்கறி மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

ராசிபுரம் தினசரி மாா்கெட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்படுகின்றன. கரோனா பரவல் காரணமாக தினசரி மாா்க்கெட் கடந்த சில மாதங்களாக செயல்படவில்லை. கரோனா பொதுமுடக்க தளா்வு காரணமாக தற்போது 35 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதர கடைக்காரா்கள் புதிய பேருந்து நிலையம், பள்ளி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை வைத்துள்ளனா்.

இதனிடையே, உரிய அனுமதி இல்லாமல் ஏராளமானோா் சாலையோரக் கடைகளைத் தொடங்கியுள்ளனா். மேலும், ஆட்டோகளில் காய்கறி, பழம் வியாபாரம் செய்வதால் தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.