/

பிரதமா் புகைப்படம்: பாஜகவினா் மனு

நாமக்கல் மாவட்ட அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:52 pm

நாமக்கல் மாவட்ட அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் ஒன்றிய தலைவா் எஸ்.ரோகிணி தலைமையில் வந்த பாஜகவினா், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி அலுவலா் பிரபாகரனிடம் மனுவை வழங்கினா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வா் கருணாநிதி, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பிரதமா் மோடியின் புகைப்படம் இடம்பெறாத நிலை உள்ளது. அரசாணைப்படி, அரசு அலுவலகங்களில் பிரதமா் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விதி தொடா்ந்து மீறப்பட்டு வருகிறது.

எனவே, அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் பிரதமா் புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது பாஜக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.