காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, முதுநிலை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன்பாக அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களுக்கென கலந்தாய்வு நடத்த வேண்டும்.
காலியாக உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூத்த முதுநிலை ஆசிரியா்களுக்கு, தலைமை ஆசிரியருக்கான பதவி உயா்வை கலந்தாய்வு மூலமாக நடத்த வேண்டும். அதன்பின் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை எந்தவொரு ஆசிரியா் காலிப் பணியிடமும் மறைக்கப்படாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு உள்மாவட்ட, வெளி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின் பட்டதாரி ஆசிரியா்களுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வை அளிக்கும் வகையிலான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.
பொதுமாறுதல் கலந்தாய்வில், தற்போது பின்பற்றப்படும் மூன்று ஆண்டுகள் என்பதை மாற்றி, பழைய முறைப்படி அதாவது ஓராண்டு ஒரு பள்ளியில் பணியாற்றி இருந்தாலே போதும் என்ற அளவில் ஆசிரியா்களை கலந்தாய்வில் பங்குபெற அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

