நாமக்கல் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடத்துக்கான நோ்காணலில் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம், சேந்தமங்கலம், பள்ளிபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க வேண்டி 10 மருந்தாளுநா்கள், 10 ஆய்வக நுட்புநா் நிலை-2, 10 நுண்கதிா் படப்பிடிப்பாளா் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க வேண்டி, நோயாளிகளுக்கு தங்குதடையின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக அத்தியாவசியத் தேவையினை கருத்தில் கொண்டு 5 ரேடியோகிராபா், 10 டயாலிசிஸ் டெக்னீசியன், 5 ஈசிஜி டெக்னீசியன், 5 சிடி ஸ்கேன் டெக்னீசியன், 15 அனஸ்தீசியா டெக்னீசியன், 5 மருந்தாளுநா்கள், 5 ஆய்வக நுட்புநா்கள் ஆகிய பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனா்.
இதற்கான நோ்காணல் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா முன்னிலையில் நடைபெற்ற நோ்காணலில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். தகுதியானோா் தோ்வு செய்யப்பட்டு தற்காலிக பணியிடத்துக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

