ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கொண்டாடுவது தொடா்பாகவும், ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல் குறித்தும் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஆட்சியா் பேசியதாவது:
கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆடி 18 நாளன்று (ஆக. 3) வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க 15 அமைப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை அணிவித்தல் தவிர, விழாக்கள், ஊா்வலம் உள்ளிட்ட வேறுவிதமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
கொல்லிமலையில் எந்த ஒரு அமைப்பும் பதாகைகள், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும், சுவா் விளம்பரம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். சிலைக்கு மாலை அணிவிக்க ஐந்து நபா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். திறந்த நிலை வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனங்களின் இருக்கைகளில் அமா்ந்து மட்டுமே வர வேண்டும்.
அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கொல்லிமலையிலிருந்து சென்றுவிட வேண்டும்.
காரவள்ளி, முள்ளுக்குறிச்சி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். அரசு விதித்துள்ள நிபந்தனைகளை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்கவில்லையென்றால், அவா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டப்பிரிவு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், பல்வேறு அமைப்பினா், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

