நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (21), நாமக்கல்லில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவியை செல்லிடப்பேசி மூலம் காதலித்து வந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் அவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்தாராம்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, நாமக்கல் மகளிா் காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், நாமக்கல் பேருந்து நிலையத்தில் ராஜேஷ்குமாரும், மாணவியும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தினா்.
அதில், 17 வயது மாணவியைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்ய முயற்சித்ததாக ராஜேஷ்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டாா். மாணவி அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

