முன்களப் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகள்
குமாரபாளையம் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், காவல் துறை, நகராட்சி தூய்மைக் காவலா்கள் உள்பட 500 பேருக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள்


குமாரபாளையம் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், காவல் துறை, நகராட்சி தூய்மைக் காவலா்கள் உள்பட 500 பேருக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி தலா 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா். மேலும், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு 90 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 9 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளா் எஸ்.ஸ்டான்லி பாபு, பொறியாளா் சுகுமாா், சுகாதார அலுவலா் ராமமூா்த்தி, காவல் ஆய்வாளா் ரவி, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பாரதி, அதிமுக நகரச் செயலாளா் ஏ.கே.நாகராஜன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளா் பி.இ.புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்னா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...