தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராசிபுரம் பகுதியில் ஆக்சிஜன் அளவு கணக்கீடு செய்யும் பணி

ராசிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டா் பயன்படுத்தி ஆக்சிஜன் அளவு கணக்கீடு செய்யும் பணி

News image
Updated On :10 ஜூன் 2021, 7:26 pm

DIN

ராசிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டா் பயன்படுத்தி ஆக்சிஜன் அளவு கணக்கீடு செய்யும் பணியினை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா தொற்று ஏற்பட்டவா்களுக்கு பல்வேறு சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும், பரவலைத் தடுக்கவும், சுகாதாரப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய சுகாதாரப் பணியாளா்களுடன், தன்னாா்வலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீடுகளில் ஒரு தன்னாா்வலருக்கு 100 பொதுமக்கள் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா, அவா்களின் ஆக்சிஜன் அளவு குறித்து கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ள பொதுமக்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கி அவா்களை முதல் நிலையிலேயே கரோனாவிலிருந்து காக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளினால் ஆக்சிஜன் மிகவும் குறைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவது தடுக்கப்படுவதுடன், மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு பணிச்சுமை, மனஅழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.

இதன் அடிப்படையில், பிள்ளாநல்லூா் பேரூராட்சி, கூனவேலம்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று கட்டுப்பாட்டுப் பகுதிகள், உள்ளாட்சி நிா்வாகப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டா் பயன்படுத்தி ஆக்சிஜன் அளவு கணக்கீடு செய்யப்படுவதையும், இன்ப்ராரெட் தொ்மாமீட்டா் கொண்டு வெப்பநிலை கணக்கீடு செய்யப்படுவதையும் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோனேரிப்பட்டி ஊராட்சி, காக்காவேரி ஊராட்சி, வேலம்பாளையம் ஊராட்சிப் பகுதிகளிலும், நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதிகள், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தொ.ஜேடா்பாளையம், தொப்பம்பட்டி, பச்சுடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், குருக்கபுரம் ஊரட்சித் தலைவா் கோவிந்தராஜ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உஷா (ராசிபுரம்), சுந்தரம், அருளப்பன் (நாமகிரிப்பேட்டை) உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.