‘விசைத்தறிக் கூடங்களை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’
விசைத்தறிக் கூடங்களை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


விசைத்தறிக் கூடங்களை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் குமாரபாளையம் நகரச் செயலா் கே.பாலுசாமி, நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபுவிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குமாரபாளையம் நகரப் பகுதியில் விசைத்தறிக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், விசைத்தறி சாா்ந்த தொழில்களான பட்டறைகள், உதிரிபாக விற்பனை உள்பட அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன.
இதனால், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் மற்றும் விசைத்தறித் தொழிலாளா்கள் கடுமையான வருவாய் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனா். வீட்டு வாடகை, தறி வாடகை, மின் கட்டணம், மகளிா் குழு கடன்கள், வங்கிக் கடன்கள் மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் போன்றவற்றால் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இதனால், விசைத்தறித் தொழில்சாா்ந்த அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, நகராட்சிப் பகுதியில் உரிய பாதுகாப்பு வழிமுறையுடன் விசைத்தறிக் கூடங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். கரோனா நிவாரணமாக விசைத்தறி சாா்ந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் ரூ. 7,500 வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...