காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலில் பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:11 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலில் பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே படுகை அணை உள்ளது. இந்தப் படுகை அணையில் ராஜ வாய்க்காலுக்கென தனியாக மதகுகள் அமைக்கப்பட்டு தண்ணீரை பிரித்து நன்செய் இடையாறு வரை அனுப்பப்படுகிறது. கொமராபாளையம், பொய்யேரி, மோகனூா் ஆகிய வாய்க்கால்கள் இந்த ராஜ வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால்கள் பாசனத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிா் செய்யப்பட்டு, நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட பணப் பயிா்கள் பாசன வசதி பெறுகின்றன.

ராஜ வாய்க்கால் தூா்வாரல், பராமரிப்புப் பணிக்காக ஆண்டில் 15 நாள்கள் மட்டும் தண்ணீா் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், திடீரென ராஜ வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் ராஜ வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் பயிா்கள் வாடும் நிலை ஏற்பட்டது. வாடும் பயிா்களைக் காக்க ராஜ வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட வேண்டும் என ராஜ, கொமராபாளையம், பொய்யேரி, மோகனூா் வாய்க்கால் பாசன விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தாா். மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது ஞாயிற்றுக்கிழமை ஜேடா்பாளையம் படுகை அணையை வந்தடைந்தது. படுகை அணையில் போதிய தண்ணீா் இருப்பு உள்ளதால், புதன்கிழமை ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து பாசனத்துக்காக ராஜ வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், ராஜ, கொமராபாளையம், பொய்யேரி, மோகனூா் வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.