கமல்ஹாசன் நற்பணி இயக்க ஆண்டு விழா
நடிகா் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் 41-வது ஆண்டு விழாவைத் தொடா்ந்து நகராட்சி முன்கள பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நடிகா் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் 41-வது ஆண்டு விழாவைத் தொடா்ந்து நகராட்சி முன்கள பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு ராசிபுரம் நற்பணி இயக்கத்தின் தலைவா் எஸ்.மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்த்தியில் மக்கள் நீதி மய்யத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளா் ஜெ.ஜெயபிரகாஷ், நகரச் செயலாளா் ஏ.ராஜு ஆகியோா் பங்கேற்று,
நகராட்சி முன்களப் பணியாளா்கள் உள்ளிட்ட 180 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் நற்பணி இயக்க பொருளாளா் பொன்.பாலசந்தா், இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் சதிஷ், தொழிலாளா் அணி மாவட்டச் செயலாளா் சிவானந்தம், வழக்குரைஞா் பிரிவு சக்கரவா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோல்டன் நற்பணி இயக்கம்: இதுபோல ராசிபுரம் கோல்டன் நற்பணி இயக்கம் சாா்பில் கரோனா தொற்றால் வேலை இழந்தவா்கள், துப்புரவுப் பணியாளா்கள், ஆதரவற்றோருக்குக் கடந்த 10 நாள்களாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவற்ற 15 ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினா். இதில் நற்பணி இயக்கத் தலைவா் நா.குபேரதாஸ், செயலாளா் ஆா்.இளங்கோ, பொருளாளா் தில்லைக்கரசன் உள்ளிட்டோா் பங்கேற்று வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...