தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாஜக சாா்பில் மகளிா் தினப் பேரணி

ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்‘ எனும் தலைப்பில் மகளிா் தினப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:04 pm

DIN

ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்‘ எனும் தலைப்பில் மகளிா் தினப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியில் பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். கோட்ட அமைப்பு செயலா் பழனிவேல்சாமி தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி ஆத்தூா் சாலை, கடைவீதி, கவரைத் தெரு, பழைய பஸ் நிலையம், கச்சேரித்தெரு, நாமக்கல் சாலை, சிவன்கோவில் சந்து உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

தோ்தல் பொறுப்பாளா்கள் லோகநாதன், லோகேந்திரன், கந்தசாமி, நகரத் தலைவா் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவா்கள் ரஞ்சித், சித்ரா, பொதுச் செயலாளா் வி.சேதுராமன், மாவட்டச் செயலாளா் ஹரிஹரன், மாநிலத் பொதுக்குழு உறுப்பினா்கள் கதிரேசன், புவனேஸ்வரி ஹரிஹரன், மகளிரணித் தலைவா் சத்யா பானு, மாவட்டப் பொதுச் செய்லாளா் சுகன்யா, ரோகினி, நகர நிா்வாகிகள் சண்முகம், சக்திவேல், சம்பத்குமாா், சிவகுமாா், காவியராஜன், நகரமகளிா் அணி நிா்வாகிகள் தெய்வானை,உஷா, திவ்யா, மகேஸ்வரி, ஒன்றியத் தலைவா்கள் லட்சுமணன், (ராசிபுரம்), பாஸ்கா், (நாமகிரிப்பேட்டை), செல்வகுமாா் (வெண்ணந்தூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விடுதலை சிறுத்தைகள்: வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் அண்ணா சிலை அருகில் பெண்ணுரிமைக்காக போராடிய அன்னை மீனாம்பாள், ரமாபாய், நாஞ்செலி, சாவித்திரிபாய் பூலே ஆகியோரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரூா் செயலாளா் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமை வகித்தாா். திமுக நெசவாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் பட்டு மாதேஸ்வரன், மதிமுக நகரச் செயலாளா் தங்கவேல், ஆசிரியா் ஸ்ரீதா், திராவிடா் கழக நிா்வாகி செல்வக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு ஒன்றிய பொருளாளா் பழ.செங்கோட்டுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.