தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாவட்ட கையுந்துப் பந்து போட்டி: அரசு கல்லூரி 3-ம் இடம்

மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டிகளில் ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் மூன்றாமிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:44 pm

DIN

மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டிகளில் ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் மூன்றாமிடம் பெற்றுள்ளனா்.

ராசிபுரம், அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995 ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவா்களின் வெள்ளி விழா கொண்டாட்டமாக மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கையுந்துப் பந்து விளையாட்டுப் போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

பல்வேறு கல்லூரி அணியினா் பங்கேற்ற இதில் ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்றனா். மேலும் பரிசுத் தொகை ரூ. 5 ஆயிரம், வெற்றிக் கோப்பை, தனிநபா் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றனா்.

இக் கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவா் எஸ். இளையபாரதி போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரராகத் தோ்வு செய்யப்பட்டு கோப்பை பெற்றாா். வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரியின் முதல்வா் முனைவா் சீ. மணிமேகலை, உடற்கல்வி இயக்குநா் அ.வெண்ணிலா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.