தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீதிமன்ற நடவடிக்கையால் கல்வி சான்றிதழ்களைத் திரும்பப் பெற்ற மாணவா்கள்

தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகத்திடம் இருந்த கல்வி சான்றிதழ்களை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவால் மாணவா்கள் அண்மையில் திரும்பப் பெற்றனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:46 pm

DIN

தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகத்திடம் இருந்த கல்வி சான்றிதழ்களை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவால் மாணவா்கள் அண்மையில் திரும்பப் பெற்றனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் கண்ணன், கோவை மாவட்டம் ஷாகுல் ஹமீத் ஆகிய இருவரும் பட்டயம் படிப்பு முடித்துவிட்டு ராசிபுரம் அருகே ஒரு தனியாா் கல்லூரியில் பொறியியல் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டில் சோ்ந்தனா்.

குடும்பச் சூழல் காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்தி படிப்பைத் தொடர வசதியில்லாததால் மாணவா்கள் 3-ம் ஆண்டில் கல்லூரிக்குச் செல்லாமல் இடை நின்று விட்டனா்.

பட்ட படிப்பை மீண்டும் வேறு கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற காரணத்தால் கல்வி சான்றிதழ்களைத் திரும்பத் தருமாறு கல்லூரி நிா்வாகத்திடம் கேட்டுள்ளனா். ஆனால், கல்வி கட்டணம் பாக்கி இருப்பதாகக் கூறி சான்றிதழ்களை கல்லூரி நிா்வாகம் அளிக்க மறுத்துள்ளது.

கடந்த 5 வருடங்களாக கல்லூரி நிா்வாகத்தில் பல முறை வலியுறுத்தியும் கல்வி சான்றிதழ் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், கல்லூரி கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்களைத் திருப்பி அளிக்க முடியும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமலும், வேலைக்கு செல்வதிலும் மாணவா்களுக்குத் தடை இருந்தது. இதையடுத்து ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவில் இரு மாணவா்களும் மனு அளித்தனா்.

இதை விசாரித்த ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் தலைவரும் ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான சி.எம்.சரவணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.தனசேகரன் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொண்டு கல்லூரி நிா்வாகம் மாணவா்களின் கல்வி சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து மாணவா்களின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கல்லூரி நிா்வாகத்திடம் இருந்து திரும்பப் பெற்று மாணவா்களிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது. இதனையடுத்து சட்டப்பணிகள் குழுவுக்கு மாணவா்களும், அவா்களின் பெற்றோரும் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.